BREAKING NEWS
latest

Qatar News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Qatar News News, Articles, Qatar News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Tuesday, February 13, 2024

மரணதண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

Image : கடற்படை வீரர்கள் இந்தியா வந்தடைந்த காட்சிகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கத்தார் அமீர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார். இவர்கள் கடந்த ஆகஸ்ட் 30, 2022 அன்று உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட முடிவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது. அதேபோல் கடந்த அக்டோபர் 26,2023 அன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு,பின்னர் அதை சிறை தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில். இருநாட்டு வெளியுறவுத்துறையின் தொடர் பேச்சுவார்த்தை அடிபடையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Qatar News

Tuesday, October 12, 2021

கத்தாரில் உள்ள இந்தியா,இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி தங்கள் ஆவணங்களை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கத்தாரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் தங்கள் ஆவணங்களை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Image credit: கத்தார் உள்துறை அமைச்சகம்

கத்தாரில் உள்ள இந்தியா,இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி தங்கள் ஆவணங்களை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கத்தாருக்கு வெளிநாட்டவர்களின் வருகை, திரும்ப செல்லுதல் மற்றும் குடியிருப்பு தொடர்பான 2015 ஆம் ஆண்டின் சட்டத்தில் உள்ள பிரிவு எண்-21 இன் விதிமுறைகளின்படி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களின்(வெளிநாட்டவர்களின்) குடியிருப்பு அனுமதியை சரிசெய்து சட்டபூர்வமாக்க அக்டோபர்-10, 2021 முதல் டிசம்பர்-31,2021 வரை காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே கத்தார் வாழ் இந்தியா,இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்த சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அதன்படி காத்தார் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட காலாவதிக்குள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரவு எண்-21 யின் அடிப்படையில் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறவோ அல்லது அபராத தொகையினை குறைப்பு செய்யவோ அல்லது முதலாளி மற்றும் நிறுவனங்களுடன் சமரசம் செய்யவோ விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த சலுகையினை பயன்படுத்த நினைக்கின்ற நபர்கள் Search and Followup Department அல்லது Umm Salal, Umm Sunaim(Formerly Industrial Area), Mesaimeer, AlI Wakra மற்றும் Al Rayyan ஆகிய இடங்களில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவை மைய அலுவலகங்களிலோ மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள நேரத்தில் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஆவணங்கள் சரிசெய்ய தகுதியான நபர்கள் பின்வருபவர்கள் ஆவார்கள்.(1)குடியிருப்பு விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள்,(2) வேலை விசா விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள்,(3) குடும்ப விசிட் விசா விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினர் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் செய்துள்ளது. அதுபோல் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டவிரோதமாக தங்குவதைத் தவிர்த்து ஆவணங்களை சட்டபூர்வமாக்கி அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கவும் உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Add your comments to Qatar News

Tuesday, August 10, 2021

உலகின் சிறந்த 100 விமான நிலையங்களில் முதலிடத்தில் கத்தார்;சிங்கப்பூர் விமான நிலையம் கடந்த பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில் முன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது

உலகின் சிறந்த 100 விமான நிலையங்களில் முதலிடத்தில் கத்தார்;இந்தியாவின் நான்கு விமான நிலையமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது

Image credit: Qatar Airways

உலகின் சிறந்த 100 விமான நிலையங்களில் முதலிடத்தில் கத்தார்;சிங்கப்பூர் விமான நிலையம் கடந்த பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில் முன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலையம் உலகின் 100 சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் மீண்டும் இடம் பெறவில்லை. உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து ஸ்கை-ட்ராக்ஸ் வெளியிட்டுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கையின்படி, கத்தார் ஹமத் சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை எடுத்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் கத்தார் மூன்றாவது இடத்தில் இருந்தது. இதேபோல் இந்த வருடத்திற்கான சிறந்த விமானங்கள் பட்டியலிலும் கத்தார் எயர்வேஸ் முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் டோக்கியோவின் உள்ள ஹனெட்டா விமான நிலையம் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதேபோல் இந்தியாவின் 4 விமான நிலையங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் விமான நிலையம் கடந்த பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.

வளைகுடா நாடுகளில் துபாய் சர்வதேச விமான நிலையம் 19-வது இடத்திலும், சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையம் 50-வது இடத்திலும், ஓமானின் மஸ்கட் விமான நிலையம் 56-வது இடத்திலும், 58-வது இடத்தில் சவுதி ரியாத் விமான நிலையமும், அபுதாபி விமான நிலையம் 84-வது இடத்திலும், பஹ்ரைன் விமான நிலையம் 85-வது இடத்திலும், சவுதி தமாம் விமான நிலையம் 87-வது இடத்திலும் உள்ளது . இந்தியாவின் டெல்லி விமான நிலையம் இந்தமுறை 45-வது இடத்திலும்(2020-யில் 50-வது இடத்தில் இருந்து), ஹைதராபாத் 64-வது இடத்திலும்(2020-யில் 71-வது இடத்தில் இருந்து), மும்பை 65-வது இடத்திலும்(2020-யில் 52-வது இடத்தில் இருந்து), பெங்களூர் 71-வது இடத்திலும்(2020-யில் 68-வது இடத்தில் இருந்து) உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Add your comments to Qatar News

Monday, August 2, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மனிதாபிமான நிகழ்வு உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளது

ஒலிம்பிக்கில் கத்தார் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றது அனைவருக்கும் தெரியும்:ஆனால் தெரியாத மற்றொரு மனிதாபிமானம் அங்கே நிகழ்ந்தது

Image : அந்த நெகிழ்ச்சியான தருணம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மனிதாபிமான நிகழ்வு உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளது

கத்தார் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நேற்று அடுத்தடுத்து இரண்டு தங்க பதக்கங்களை வென்றது. இதில் இரண்டாவது தங்கம் உயரம் தாண்டும் போட்டிக்கு கிடைத்தது. இது ஒலிம்பிக் போட்டி தொடர்பான செய்திகளை தொடர்ச்சியாக பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.... ஆனால் தெரியாத மற்றொன்று உள்ளது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தான் முக்கியம் என்பதை நிரூபித்தார் கத்தார் வீரர் Mutaz Barshim அவர் தன்னுடன் போட்டியிட்ட இத்தாலி வீரர் Gianmarco Tamberi அவர்களுக்காக இந்த தியாகத்தை செய்தார்.

உயரம் தாண்டும் போட்டியின் கடைசி சுற்றில் இருவருமே ஒரே அளவில் உயரத்தை கடந்துள்ளனர். தொடர்ந்து நடுவர் இருவருக்கும் 3 வாய்ப்புகளை வழங்கினார் அதிலும் இருவருமே ஒரே உயரத்தை தாண்டினார். இந்த நேரத்தில் இத்தாலி வீரருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தங்க பதக்கம் யார்க்கு வழங்குவது என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இத்தாலி வீரர் காயம் காரணமாக தண்ணால் இன்னும் உயரத்தை தாண்ட முடியாது என்று கூறியுள்ளார். இதை பார்த்த கத்தார் வீரர் Mutaz Barshim நானும் தாவாமல் இருந்தால் நீங்கள் பதக்கத்தை எப்படி வழங்குவீர்கள்.... அ‌ல்லது இந்த தங்க பதக்கத்தை இருவருமே பகிந்து கொள்ள விதிமுறைகள் எதுவும் உள்ளதாக என்று நடுவரிடம் கேட்டார்.

அதற்கு நடுவர் நீங்களும் தாவவில்லை என்றால் பதக்கம் பகிர்ந்து அளிக்கப்படும் என்றார். தனக்கு தங்கம் வெல்ல வாய்ப்பு இருத்தும் "அப்படியே செய்யுங்கள்" என்று ஒரு நொடிகூட யோசிக்காமல் அடுத்த நொடியே கூறவே அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதை கேட்டதும் கத்தார் வீரர் Mutaz Barshim அவர்களை இத்தாலி வீரர் கட்டியனைத்து தன்னுடைய நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி தாங்காமல் மைதானம் முழுவது அவர் சுற்றி வந்தார். போட்டி பொறாமை நிறைந்த இந்த உலகில் இப்படி ஒரு மனிதர என்று நேற்று முதல் உலக மீடியாக்கள் மற்றும் செய்திதாள்கள் அவரை புகழ்ந்து செய்தி வெளியிட்ட வண்ணமே உள்ளனர். கத்தார் இதுவரையில் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளும் சேர்த்து தன்னுடைய வரலாற்றில் இதுவரையில் நேற்று பெற்ற இரண்டு தங்கமும் சேர்த்து 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

Add your comments to Qatar News

Saturday, July 31, 2021

இந்தியர்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது

சவுதி செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு,நீங்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடியு‌ம்

Image credit: Qatar Airways

இந்தியர்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது

இந்தியர்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டவர் கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் கட்டாரில் தங்கிய பின்னர் நீங்கள் சவுதியில் நுழையலாம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் கத்தார் வழியாக சவுதி அரேபியாவில் நுழைய ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் காத்திருக்கிறார்கள். கத்தாரில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட On-Arrival Visa முறை மீண்டும் துவங்கியுள்ள நிலையிலும் அதன் மூலம் சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியுமா என்பது குறித்து கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக வெளிநாட்டவர்கள் இப்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய துவங்கியுள்ளனர். கத்தார் பயணத்திற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களும் சரி செய்தால் பயண நடைமுறைகள் எளிதாக இருக்கும்.

பயணியின் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும், திரும்பச் செல்வது உள்ளிட்ட விமான டிக்கெட், கட்டாரில் தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவு, கத்தார் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ், கோவிட் எதிர்மறை ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ், புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கத்தார் இஹ்திராஸ் செயலியின் Approval ஆகியவையும், 5,000 கத்தார் ரியால்கள் பணம் வங்கியிலோ அல்லது கைவசமோ இருக்க வேண்டும் உள்ளிடவையே கத்தாரில் வந்திறங்கும் பயணி ஆன்-அரைவல் விசா பெறுவதற்கான நிபந்தனைகள் ஆகும். கத்தாரில் இறங்கிய பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவு செய்தவர்கள் பின்னர் அங்கிருந்து அடுத்த விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் செல்லலாம்.

மேலும் 14 நாட்கள் முடித்து சவுதி அரேபியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் தோஹா விமான நிலையத்தில் பல இடங்களில் வைத்து ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதாக கத்தார் வழியாக சவுதியில் நுழைந்த பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே கத்தார் வழியாக பயணிப்பவர்கள் இதுபோன்ற ஆவணங்களை Print எடுத்து கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதுபோல் தோஹா விமான நிலையத்தில் வைத்து சவுதி விசா குறித்து சில சந்தேகங்களை கீழ் மட்ட அதிகாரிகள் எழுப்பியதாக, ஆனால் மூத்த அதிகாரிகள் வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். தவக்கல்னா செயலியில் Status Immune-ஆன பிறகு நீங்கள் சவுதி அரேபியாவிற்கு வந்தால், நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கிடைக்கும். இதன் மூலம் பயணச் செலவை மேலும் குறைக்க முடியும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடைய ஆகஸ்டு-1 முதல் Visit விசாவில் பயணிகள் நிபந்தனைகளுடன் சவுதியில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தியும் வெளியாகியுள்ளன.

Add your comments to Qatar News

Friday, July 30, 2021

கத்தார் பயண நிபந்தனைகளை திருத்தியுள்ளது;புதிய அறிவிப்பு ஆகஸ்டு-2 முதல் நடைமுறையில் வருகிறது

கத்தார் பயண நிபந்தனைகளை மீண்டும் திருத்தியுள்ளது;புதிய அறிவிப்பு ஆகஸ்டு-2,2021 திங்கட்கிழமை முதல் நடைமுறையில் வருகிறது

Image credit: Qatar Airways

கத்தார் பயண நிபந்தனைகளை திருத்தியுள்ளது;புதிய அறிவிப்பு ஆகஸ்டு-2 முதல் நடைமுறையில் வருகிறது

கத்தார் சுகாதாரத்துறை தங்கள் நாட்டிற்கு வருகின்ற பயணிகளுக்கு புதிய பயண விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி வருகின்ற திங்கள்கிழமை அதாவது ஆகஸ்ட் 2,2021 முதல் புதிய அறிவிப்பு அமலுக்கு வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கத்தார் வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை கட்டாயமாகும். கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பான திருத்தப்பட்ட புதிய அறிவிப்பை இன்று(30/07/21) மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்குப் பொருந்தும் புதிய விதிமுறைகள் பின்வருமாறு:

1. கத்தார் நாட்டின் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள், கத்தாரின் பொது சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை கத்தாரில் இருந்து எடுத்திருந்தால் அல்லது ஏற்கனவே கத்தார் நாட்டில் இருந்து கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருந்தாலும் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இரண்டு நாட்கள் தங்க வேண்டும். இரண்டாவது நாளில் ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை செய்து அதன் முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால், தனிமைப்படுத்தல் முடித்து நீங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.

2. கத்தார் நாட்டின் குடியிருப்பு விசா வைத்திருப்பவர் கத்தாரின் வெளியில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தாலோ அல்லது நீங்கள் தடுப்பூசி எடுக்காத நபராக இருந்தாலோ, இவை இரண்டும் இல்லாமல் கத்தாருக்கு வெளியே வைத்து கோவிட் மூலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருந்தாலும் 10 நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்.

3. விசிட்(குடும்பம், சுற்றுலா, தொழில்) இதில் எந்த பிரிவினராக இருந்தால் கத்தார் நாட்டின் வெளியில் இருந்து கத்தார் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட நபராக இருந்தாலும் கூட அவர்கள் 10 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

4. மேலும் விசிட்(குடும்பம், சுற்றுலா, வேலை) விசாக்களில் முன்று பிரிவினரும் கத்தாரில் நுழைய வேண்டும் என்றால் கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். எடுக்காத நபராக இருந்தால் கத்தாரில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் கத்தார் நாட்டிற்கு பயணத்திற்குத் தயாராகி வருபவர்கள் கத்தார் பொது சுகாதரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் புறப்படுவதற்கு முன் பார்த்து சமீபத்திய வழிகாட்டுதல்களைப் புரிந்து கொண்டு மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Add your comments to Qatar News

Friday, July 23, 2021

கத்தாரில் வந்திறங்கிய 17 இந்தியர்கள் திருப்பி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்;காரணம் இதுதான்....

கத்தாரில் வந்திறங்கிய 17 இந்தியர்கள் நிபந்தனைக்கு இணங்காததற்காக திருப்பி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளன

Image : Doha Airport

கத்தாரில் வந்திறங்கிய 17 இந்தியர்கள் திருப்பி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்;காரணம் இதுதான்....

கத்தார் விமான நிலைய அதிகாரிகள் இந்தியாவில் இருந்து தோஹா விமானம் நிலையத்தில் வந்திறங்கிய 17 இந்தியர்களை நிபந்தனை பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக திருப்பி இந்தியாவிற்கே அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதற்காக காரணமும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமுதல் வருகின்ற யாரும் இந்த தவறை செய்ய வேண்டாம். நேற்று(22/07/21) காலை 9 மணிக்கு On-Arrival விசா மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் தோஹா வந்திறங்கிய 17 இந்தியர்கள் 10 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இந்தியாவிற்கே மாலையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கான காரணமாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில் On-Arrival விசா மூலம் வருகின்ற பயணிகளிடம் ஐந்தாயிரம் கத்தார் ரியால்கள் அல்லது அதற்கு இணையான இந்திய ரூபாய் பயணியின் வங்கி கணக்கிலோ அல்லது பணமாகவோ கைவசமோ வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்காததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 17 பேரும் அவர்கள் காலையில் வந்த அதே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாயகம் திரும்பினர். இந்தியா திரும்பிய 17 பேருமே சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக கத்தார் வந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா திரும்புவதற்காக ஒவ்வொரு பயணியிடமிருந்தும் ஏர் இந்தியா 650 ரியால்கள் வசூலித்ததாக வருத்தத்துடன் பயணிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.மேலும் திரும்ப இந்திய அழைத்துச் செல்ல 2000 ரியால்கள் கட்டணமாக விமான நிறுவனம் கேட்டதாகவும் தாங்கள் வாக்குவாதம் செய்த நிலையில் கட்டணத்தை குறைத்ததாகவும் அவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர். அதேபோல் On-Arrival விசா கத்தார் வருகின்ற பயணிகளின் கைவசமோ அல்லது வங்கி கணக்கிலோ பணம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகளோ அல்லது இந்தியாவில் உள்ள டிராவல் ஏஜன்சியோ தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் அவமானப்படுத்தப்பட்டதாக பயணிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்.

Add your comments to Qatar News

Thursday, July 22, 2021

உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது

உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்திலும்,துபாயின் எமிரேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், அபுதாபியின் எட்டிஹாட் 20 வது இடத்திலும் உள்ளன

Image credit: Qatar Airways

உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது

உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்திலும்,துபாயின் எமிரேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், அபுதாபியின் எட்டிஹாட் 20 வது இடத்திலும் உள்ளன

உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது இந்த பட்டியலில் வளைகுடாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்ற மூன்று விமான நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. துபாயின் எமிரேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், அபுதாபியின் எட்டிஹாட் 20 வது இடத்திலும் உள்ளன. விமானத்துறைகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகளின் சிறப்புகளை மதிப்பிடும் மதிப்பீட்டு நிறுவனமான ஆஸ்திரேலியாவின் விமான மதிப்பீடு டாட்.காம் ஆனது உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலைத் தொகுத்து, ஒவ்வொரு ஆண்டும் முதல் 20 இடங்களில் உள்ள விமானங்களின் பட்டியல் வெளியிடும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலிலை தற்போது வெளியாகியுள்ளன.

விமானத்தின் கேபினின் உள்ளே மேம்படுத்தப்படும் புதுமைகள் மற்றும் பயணிகள் சேவை சிறப்பம்சங்களுடன், கூடுதலாக தற்போதைய கோவிட் சூழ்நிலைக்கேற்ப முன்னெச்சரிக்கை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் கணக்கில் கொண்டு கத்தார் ஏர்வேஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் எமிரேட்ஸ் தங்களுடைய கடந்தகால நிலைமைகளை(Position) திருத்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. பிரீமியம் எக்னாமிக்ஸ் வகுப்பின் சிறப்பே எமிரேட்ஸ் முன்னேற்றத்திற்காக காரண‌ம் ஆகும். இந்த பட்டியலில் அபுதாபியின் எட்டிஹாட் ஏர்வேஸ் 20 வது இடத்தில் உள்ளது. ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ள மற்ற விமான நிறுவனங்கள் ஆகும்.

Add your comments to Qatar News

Sunday, July 11, 2021

கத்தார் விசாவில் அழைத்துச்சென்று சவுதி பாலைவனப் பகுதியில் ஆடுமேய்க்க விடப்பட்ட பெண்மணி மீட்கப்பட்டார்

கத்தார் விசாவில் அழைத்துச்சென்று சவுதி பாலைவனப் பகுதியில் ஆடுமேய்க்க விடப்பட்ட பெண்மணி இரண்டரை வருடத்திற்கு பிறகு மீட்கப்பட்ட அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

Image credit: பாதிக்கப்பட்ட எலிஸம்மா

கத்தார் விசாவில் அழைத்துச்சென்று சவுதி பாலைவனப் பகுதியில் ஆடுமேய்க்க விடப்பட்ட பெண்மணி மீட்கப்பட்டார்

கத்தார் விசாவில் எலிஸம்மா என்ற இந்திய பெண்மணியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்று Sponsore சட்டத்திற்கு புறம்பாக சவுதி-கத்தார் எல்லைப்புறமான சால்வா பாலைவனப் பகுதியில் கடந்த 2.5 வருடங்களாக ஆடு மற்றும் ஓட்டகம் உள்ளிடவையை மேய்க்கும் வேலைக்காக விடப்பட்டுள்ளார். பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் இனிமேல் தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் இறந்து விடுவோம் என்ற நிலையில் பல கிலோமீட்டர் நடந்து முக்கிய சாலைகளில் வந்தநிலையில் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

இதையடுத்து காவல்நிலைய அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் மார்த்தாண்டம் மணி என்ற சமூக ஆர்வலர்கள் உதவி மூல‌ம் அவர் மீட்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். பெண்மணி ஒருவர் வளைகுடா பாலைவன பகுதியில் இப்படி ஆடு மற்றும் ஓட்டகம் மேய்க்கும் வேலைக்காக விடப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. எலிஸம்மா விசாகப்பட்டனம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

Add your comments to Qatar News

Friday, July 9, 2021

கத்தாருக்கு ஜூலை-12 முதல் வருகின்ற தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை

கத்தாருக்கு ஜூலை-12 முதல் வருகின்ற தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை,இந்த புதிய அறிவிப்பு இந்தியர்களுக்கும் பொருந்தும்

Image : Beautiful Qatar

கத்தாருக்கு ஜூலை-12 முதல் வருகின்ற தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை

கத்தார் விசா உள்ள இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினரும் ஜூலை-12,2021 முதல் வரும்போது தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு இந்தியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த அறிவிப்பை கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் Green, Yellow மற்றும் Red பட்டியலில் உள்ள இந்தியர்களுக்கும் பொருந்தும். அதே சமயம் கட்டார் வந்ததும் RT-PCR பரிசோதனை செய்து Negative ஆக இருக்க வேண்டும், அதே சமயம் Positive ஆக இருந்தால் தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும்.புதிய அறிவின் விலக்கு பெறுவதற்காக விதிமுறைகள் பின்வருமாறு:

  1.  இரண்டாவது டோஸ் பெற்ற இரண்டு வாரங்களை முடித்திருக்க வேண்டும்
  2.  கத்தார் சுகாதாரதுறையால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் எடுத்திருக்க வேண்டும்
  3. கத்தார் புறப்படுவதற்கு முன்பு நீங்கள் “Ehteraz” பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுகாதார தகவல்களை புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அதில் பதிவேற்ற வேண்டும்.
  4. கோவிட்சீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும். இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ளவர்களில், குழந்தைகளின் தனிமைப்படுத்தல் விலக்கு தொடர்பான விதிமுறைகள்.
  5.  11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை.
  6.  தடுப்பூசி எடுத்துக்கொண்ட 12 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை 
  7. தடுப்பூசி போடாதவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். பெற்றோர்களில் ஒருவர் தடுப்பூசி போட்டவராக இருந்தாலும் குழந்தைகளுடன் இருக்க வேண்டும்.
  8.  அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுக்காத Red List-யில் உள்ளவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல்,Yellow List-யில் உள்ளவர்களுக்கு 7 நாட்கள்  மற்றும் Green List-யில் உள்ளவர்களுக்கு 5 நாட்கள் கட்டாயம் ஆகும்.

Add your comments to Qatar News

Monday, June 7, 2021

கத்தார் ஏர்வேஸ் மீண்டும் ஷார்ஜாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தினசரி சேவைகளை தொடங்குகிறது

கத்தார் ஏர்வேஸ் மீண்டும் ஷார்ஜாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தினசரி சேவைகளை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Image : Official Qatar Airways

கத்தார் ஏர்வேஸ் மீண்டும் ஷார்ஜாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தினசரி சேவைகளை தொடங்குகிறது

கத்தார் ஏர்வேஸின் தினசரி விமான சேவையினை தோஹாவிலிருந்து ஷார்ஜாவுக்கு ஜூலை-1,2021 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று "கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்" அறிவித்துள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும். இந்த விமானம் ஜூலை- 1 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு தோஹாவிலிருந்து புறப்படும். விமானம் மாலை 4.45 மணிக்கு ஷார்ஜா வந்து மீண்டும் மாலை 5.55 மணிக்கு கத்தார் திரும்பும். இந்த விமானம் கத்தாரின் உள்ளூர் நேரப்படி 6.05 தோஹாவுக்கு மீண்டும் தரையிறங்கும். அடுத்த மாத இறுதிக்குள் 140 நகரங்களுக்கு வாரத்திற்கு 1,200 சேவைகளை இயக்கப்போவதாக கத்தார் ஏர்வேஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Add your comments to Qatar News

Saturday, May 29, 2021

கத்தாரில் கோவிட் விதிமுறைகளை மீறினால் 861 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கத்தாரில் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 861 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கத்தாரில் கோவிட் விதிமுறைகளை மீறினால் 861 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கத்தாரில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறுபட்ட கட்டுபாடுகளை சுகாதரத்துறை விதித்துள்ளது.இந்நிலையில் அங்கு விதிமுறைகளை மீறும் நபர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகின்றன.கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் 960 நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில். இந்த வாரத்தில் விதிமுறைகளை மீறியதற்காக 861 பேர் மீது புதிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலாதிக்க நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் கைது நடவடிக்கைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில் பொது இடங்களில் கண்டிப்பாக முககவசம் பயன்படுத்த வேண்டிய இடங்களில் அதை அணியாத 734 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக இடைவெளி தூரத்தை கடைப்பிடிக்காத காரணத்திற்காக 118 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கைபேசியில் இஹ்திராஸ் செயலியை பதிவேற்றம் செய்யாத 9 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட் விதிமுறைகளை பின்பற்றாததற்கு கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் புதியதாக இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Add your comments to Qatar News

Sunday, May 23, 2021

கத்தாரில் கொரோனா கட்டுபாடுகள் மீறிய 960 பேர் கைது;அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது

கத்தாரில் கொரோனா கட்டுபாடுகள் மீறிய 960 பேர் கைது;ஒரு காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவிர 4 பேருக்கு மேல் பயணிக்க கூடாது என்று அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது

Image : Qatar Police

கத்தாரில் கொரோனா கட்டுபாடுகள் மீறிய 960 பேர் கைது;அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது

கோவிட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக கத்தாரில் பொலிசார் 961 பேரை கைது செய்தனர். பல்வேறு வகையான கொரோனா விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

  1. வெளியே சென்றபோது முகமூடி அணியாத குற்றத்திற்காக 510 பேர் கைது செய்யப்பட்டனர்.
  2. பூங்காக்கள் மற்றும் கார்னிச்களில் கூட்டமாக வந்ததற்காக 180 பேரும்
  3. சமூக இடைவெளி தூரத்தை பின்பற்றாத குற்றத்திற்காக 260 பேரும் கைது செய்யப்பட்டனர்.
  4. மொபைலில் இஹ்திராஸ் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்யாததற்காக  பேர் கைது செய்யப்பட்டனர். 
  5. வீட்டுத் தனிமைப்படுத்தல் மீறிய ஒருவர் 
  6. அனுமதிக்கப்பட்டதை விட அதிகமானவர்களை காரில் ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் கத்தாரில் தற்போதைய சூழ்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறும்போது முகமூடி அணிவது கட்டாயமாகும். கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒரே குடும்ப உறுப்பினர்களை சேர்ந்தவர்கள் தவிர, நான்கு பேருக்கு மேல் ஒரு காரில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணியாதது தொடர்பான விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது 1990 ஆம் ஆண்டு சட்ட எண்-17 யின் கீழ் தொற்று நோய் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Add your comments to Qatar News

Monday, April 5, 2021

கத்தாரிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு இனிமுதல் செலவு அதிகரிக்கும்

கத்தாரிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு இனிமுதல் 350 ரியால் முதல் 500 ரியால் வரையில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணமாக வசூலிக்கப்படும்

கத்தாரிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு இனிமுதல் செலவு அதிகரிக்கும்

கத்தார் சுகாதார நிலையங்கள்(பி.எச்.சி.சி) ஆனது வெளிநாட்டு பயணிகளுக்கான கோவிட் பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இதன் மூலம் கட்டாரிலிருந்து இந்தியாவுக்குச் செல்ல தேவையான பி.சி.ஆர் பரிசோதனைகளை இந்த மையங்களில் இருந்து இனிமுதல் பெற முடியாது. எனவே இந்த இலவச பி.சி.ஆர் பரிசோதனைகளை இடைநிறுத்துவது தாயகம் திரும்புகின்ற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு மேலும் பயணச் செலவை அதிகரிக்கும்.

இதன் திடீர் அறிவிப்பு மூலம் பயணிகள் பி.சி.ஆர் சோதனைக்காக தனியார் சுகாதார மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான 350 கத்தார் ரியால் முதல் 500 ரியால் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோயால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு இது மேலும் பின்னடைவாக இருக்கும் என்று தொழிலாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதரத்துறை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் சுகாதார மையங்களில் இருந்து பி.சி.ஆர் மேற்கொள்ளப்படலாம் என்றும் பி.எச்.சி.சி. வெளியிட்டுள்ள செய்தியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடைய Bachelor நபர்களுக்காக(தொழிலாளர்களுக்கு) இரண்டு மையங்களில் இலவசமாக பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டாலும் வரும் நாட்களில் இந்த சேவையும் ரத்து செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to Qatar News

Tuesday, March 30, 2021

கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை;முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்

கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை;முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று அதிகாரிகள் தொலைக்காட்சியில் பேசுகையில் இன்று கூறியுள்ளார்

Image : டாக்டர்.அகமது முகமது அல் ரயான்

கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை;முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்

கத்தாரில் கோவிட்டின் இரண்டாவது அலை அதிகமான மக்களுக்கு பரவாமல் தடுக்க முழுமையான ஊரடங்கு தேவைப்படும் என்று ஹமத் மருத்துவக் கழகத்தின் தீவிர சிகிச்சை பிரிவின் செயல் தலைவர் டாக்டர்.அகமது முகமது அல் ரயான் தெரிவித்தார் இரண்டாவது அலையின் தீவிரத்தை பொறுத்து, இரண்டு முதல் மூன்று வாரங்கள் முழுமையான ஊரடங்கு தேவைப்படலாம் என்று தொலைக்காட்சியில் பேசுகையில் இன்று அகமது முகமது அல் ரயான் இதனை கூறினார். இது நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு முழுமையான ஊரடங்கு வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த அணுகுமுறையாகும் என்றார்.மக்கள் வழக்கம் போல் வேலை, நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் சமூகக் கூட்டங்களுடன் சென்றால் கோவிட் வேகமாக பரவுவார் என்று அவர் கூறினார். கடநத மே-2020 யில், கோவிட்டின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது,220 நோயாளிகள் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். வைரஸின் இந்த இரண்டாவது அலை மூலம் அதிகமான மக்கள் நோய்வாய்ப்பட்டு வருகிறார்கள், மேலும் தீவிரமாக அறிகுறிகளுடன் அவர்கள் காணப்படுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில் கோவிட்டின் மரபணு மாற்ற ஏற்பட்ட பல்வேறு வகையான வைரஸ் பாதிப்புகள் ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு கட்டுபாடுகள் இருந்தாலும்கூட ஹமத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த transit பயணிகளிடம் இருந்து பிஸியான நேரங்கள் நெருங்கிய தொடர்புகள் மூலம் நாட்டிற்குள் இந்த வகையான வைரஸ் நுழைந்திருக்கலாம் என்றார். எந்த வகையான வைரஸ் பாதிப்புகளுக்கும் சிகிச்சை முறைகள் ஒரே மாதிரியானவை என்று அவர் விளக்கினார். இருப்பினும், கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.அதே நேரத்தில், இரண்டாவது அலைகளால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Add your comments to Qatar News

Monday, March 29, 2021

தேனிலவுக்காக சென்று கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய தம்பதியினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்

தேனிலவுக்காக சென்று கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய தம்பதியினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : முஹம்மது ஷரிக் மற்றும் மனைவி ஒனிபா குரேஷி

தேனிலவுக்காக சென்று கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய தம்பதியினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற இந்திய தம்பதியை கத்தார் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இன்று(29/03/21) காலை, மும்பையைச் சேர்ந்த அந்த தம்பதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் விடுவித்தது. முன்னர் கத்தார் நீதிமன்றம் தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதமும் விதித்திருந்தது. கடந்த ஜூலை,2019-இல், மும்பையைச் சேர்ந்த முகமது ஷரிக் மற்றும் அவரது மனைவி ஒனிபா குரேஷி ஆகிய இருவரையும் கட்டாரில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களது சாமான்களில்(பைகளில்) இருந்து 4.1 கிலோகிராம் ஹாஷிஷை விமான நிலைய போலீசார் கண்டுபிடித்தனர். தம்பதியினர் தங்கள் தேனிலவு கொண்டாட திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் கழித்து கத்தார் வந்த நிலையில் இப்படி கைது செய்யப்பட்டனர்.

கத்தாரில் உள்ள ஒரு நண்பரிடம் ஒப்படைக்க ஹனிமூன் நிதியுதவி அளித்த உறவினர் ஒப்படைக்கப்பட்ட ஒரு பாக்கெட்டில் இந்த மருந்துகள் இருந்தன. ஒனிபாவும் அவரது கணவரும் தனது முதல் குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தபோது கத்தார் வந்தடைந்தனர், பின்னர் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாக சிலையில் இருந்த நிலையில்,கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒனிபா தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஒரு வருட கால விசாரணையின் பின்னர், மும்பை காவல்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) தம்பதியினர் நிரபராதிகள் என்றும் அவர்கள் உறவினரால் இப்படி சிக்கிக்கொண்டனர் எனுபதை கண்டறிந்தனர்.

கடந்த செப்டம்பரில், உறவினரான தபஸும் அவரது கூட்டாளியான நிஜாம் காராவும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 13 கிராம் கோகோயின் மீட்கப்பட்டது. அடுத்தடுத்த விசாரணையின் போது பலமுக்கிய தகவல்களை அவர் அதிகாரியிடம் தெரிவித்தனர் என்று என்சிபி அதிகாரிகள் முன்னர் வெளிப்படுத்தியிருந்தனர்.தம்பதியினரின் குடும்பத்தினரும், இந்திய அதிகாரிகளும் தொடர்ந்து அவர்களை குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து விடுதலை பெற செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதையடுத்து மறு விசாரணைக்காக கத்தார் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று இந்திய ஜோடி விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சட்டப்போரட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Add your comments to Qatar News

Saturday, March 27, 2021

கத்தாரில் வருகின்ற நபர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் முன்பதிவு ஆகஸ்ட்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கத்தாரில் வருகின்ற நபர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் முன்பதிவு ஆகஸ்ட்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : Qatar Airways

கத்தாரில் வருகின்ற நபர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் முன்பதிவு ஆகஸ்ட்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கத்தாரில் வருகின்ற பயணிகளுக்கான ஹோட்டல் தனிமைப்படுத்தல் முன்பதிவு ஆகஸ்ட்- 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவர் கத்தார் போர்ட்டலில்(தளத்தில்) மேலும் இரண்டு ஹோட்டல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 62 ஹோட்டல்களில் 8886 அறைகள் தனிமைப்படுத்துதல் நோக்கங்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் செய்ய 2300 ரியால்களிலிருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் Green பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கத்தார்க்கு வரவேண்டும் என்றால் தற்போது ஏழு நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். விமான நிலையத்திலிருந்து தங்கும் ஹோட்டல் வரையிலான பயணம், ஹோட்டல் அறை, தனிமைப்படுத்தல் காலத்தில் வழங்கபடும் உணவு மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை உள்ளிட்டவை அடங்கிய Package ஆக கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தலை முன்பதிவு செய்யலாம். இதற்கிடையில், கத்தாரில் தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்த நபருகள் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும்போது தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Add your comments to Qatar News

கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற கவுரவத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது

கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற கவுரவத்தை மீண்டும் இந்த வருடமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது

Image credit: Qatar Airways Official

கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற கவுரவத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது

கத்தார் ஏர்வேஸில் பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய இருக்கை கிலோமீட்டர்(ASK) ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற தனது கவுரவத்தை ஏர்வேஸ் மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது அதிகாரப்பூர்வ விமான வழிகாட்டி(OAG) தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் உலகெங்கிலும் உள்ள 130-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வாரத்திற்கு 1,000 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. மார்ச் 2021-இல், கத்தார் ஏர்வேஸின் கிடைக்கக்கூடிய இருக்கை கிலோமீட்டர்கள் 2.6 பில்லியனாக இருந்தன. அதுபோல் மற்ற எந்தவொரு விமான நிறுவனங்களும் வழங்காத வகையில் பயணிகளுக்கு அதிகமான இணைப்பு(Connectivity Servers) சேவைகளையும் கத்தார் ஏர்வேஸ் வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.

Add your comments to Qatar News

Saturday, March 20, 2021

கத்தார் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு இடையேயான பெரிய விபத்து 30 விநாடிகளில் தவிர்க்கப்பட்டது

கத்தார் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு இடையேயான பெரிய விபத்து 30 விநாடிகளில் தவிர்க்கப்பட்டது என்று Air Accident Investigation Bureau இந்திய சிவில் விமான ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

கத்தார் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு இடையேயான பெரிய விபத்து 30 விநாடிகளில் தவிர்க்கப்பட்டது

இந்தியாலில் கடந்த 2020 ஆகஸ்ட் 28 அன்று மாலை 4 மணியளவில் பெங்களுரிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் மற்றும் தோஹாவிலிருந்து புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் ஆகியவை கொச்சியில் தரையிறங்க முயன்றபோது இந்த இரு விமானங்கள் மோதி நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று தற்போது தெரியவந்துள்ளது. விபத்து நடக்கவிருந்த நேரத்தில், இரண்டு விமானங்களுக்கும் இடையிலான உயர வேறுபாடு வெறும் 498 அடி மற்றும் தூரம் 2.39 நாட்டிகல் மைல்கள், அதாவது 4.43 கிலோமீட்டர் எனவும்,மோதலுக்கு 30 வினாடிகளுக்கு குறைவாகவே நேரம் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதை கண்டறிந்த விமான நிலைய கட்டுபாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் தன்னுடைய உயரத்தை 3512 அடியாக குறைத்து விபத்தில் இருந்து தப்பியது தெரியவந்துள்ளது. விமானிகளுக்கு தரையிறங்க இரண்டாவது மற்றும் இறுதித் தீர்மான ஆலோசனை வழங்கப்பட்டபோது ஸ்பைஸ்ஜெட் 4,000 அடியிலும், கத்தார் ஏர்வேஸ் 4,498 அடியிலும் இருந்தது எனவும். ஸ்பைஸ் ஜெட் விமானம் உடனடியாக தங்கள் உயரத்தை அதாகரிக்கவோ அல்லது குறைக்கவோ அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரனை அறிக்கையின்படி, ஸ்பைஸ்ஜெட் விமானிகள் கொச்சியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை எனவும், விமான நிலையத்தில் தரையிறக்கும்போது அவர்கள் தரையிறங்க வேண்டிய உயரத்தை முன்கூட்டியே அமைக்க(Set) மறந்துவிட்டார்கள். எனவும் ஸ்பைஸ்ஜெட் விமானிகள் குற்றவாளிகள் என்று Air Accident Investigation Bureau இந்திய சிவில் விமான ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை தெரிவித்து உள்ளனர். விபத்து தவிர்க்கப்பட்ட நேரத்தில் இரண்டு விமானங்களிலும் சேர்த்து 300 ற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

Add your comments to Qatar News

Tuesday, January 12, 2021

கத்தார் விமானங்கள் பறப்பதற்கான விமான வன்வழி எல்லைகள் எகிப்து மீ்ண்டும் திறப்பு


கத்தார் விமானங்களுக்கான வான்வழி விமான எல்லையை எகிப்து திறந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கத்தார் விமானங்களுக்கான தடையை நீக்கியுள்ளதாகவும், கத்தார் விமானங்கள் எகிப்திய வான்வெளி வழியாக பயணிக்க முடியும் என்றும் எகிப்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஜி.சி.சி உச்சி மாநாட்டில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை அல் உலாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளின் விமான நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் விமான சேவைகளை இயக்க முடியும். எகிப்து மற்றும் கத்தாரில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு விமான சேவை நிறுவனங்கள் கால அட்டவணையை ஒப்புதலுக்காக அனுப்ப வைக்க வேண்டும் என்று எகிப்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் அஷ்ரப் நூயுர் தெரிவித்தார். தடை முடிவடைந்த நிலையில் முதல் கட்டாரி விமானம் நேற்று காலை எகிப்திய வான்வெளி வழியாக கடந்து சென்றது.

இதற்கிடையில், சவுதி அரேபியா ஏற்கனவே கத்தார் உடனான அனைத்து போக்குவரத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது.கத்தார் ஏர்வேஸ் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் இரு நாடுகளுக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் ஆரம்பத்தில் ரியாத் மற்றும் ஜித்தாவிலிருந்து வாரத்திற்கு ஏழு சேவைகளை இயக்கும் என்று தெரிவித்துள்ளது. இதில் ரியாத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்களும், ஜித்தாவிலிருந்து வாரத்திற்கு மூன்று விமானங்களையும் முதலில் இயக்க முடிவு செய்து சேவைகள் இயக்கவும் துவங்கியுள்ளது.

Add your comments to Qatar News